அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு மேஜர் ஜெனரல் உதய பெரேராவுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அவரை யுத்தகுற்ற சந்தேக நபர் என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 முதல் 2011 வரை மலேசியாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகராக இருந்த மேஜர் ஜெனரல் உதயபெரேராவிற்கே குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் ஐந்தாம் திகதி உதயபெரேரா தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக குடிவரவு பகுதிக்கு சென்றவேளை அவருக்கு அமெரிக்காவின் இந்த அனுமதி மறுப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூர் எயர்லைன்ஸ் பணியாளர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களிற்கு அது குறித்த செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உதயபெரேரா பயணத்தை இரத்துச்செய்துள்ளார்.