அமெரிக்க தூதுவர் ஜூலி சங், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சந்திப்பு

ஜனநாயகத்தை பின்பற்றும் நாடுகள் என்ற ரீதியில் அவற்றின் மதிப்புக்களை இரு நாடுகளும் பகிர்ந்துக் கொண்டுள்ளன. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பிரஜைகளின் பங்கேற்பு என்பவற்றை ஊக்குவிக்கும் திறந்த அரசுப் பங்குடமை போன்ற திட்டங்கள் மூலம் ஆழமான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த முடியும் என  இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை-ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கம் மீளமைக்கப்படவிருப்பதை வரவேற்ற அமெரிக்கத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.