பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் காலிமுகத்திடலில் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்

307 Views

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் காலிமுகத்திடல் போராட்டத்தில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.

அதன்படி நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

FUTA இன்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி காலி முகத்திடலை அடையும் எதிர்ப்பு பேரணி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது பொதுத் தேவைகள் குறித்து தாங்கள் உணர்திறன் உடையவர்கள் என FUTA தலைவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஷ்யாமா பன்னெஹெகா தெரிவித்தார்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்ப்பதாக தெரியவில்லை. அரசாங்கம் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் முழு திறனுடன் கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அனைத்து அரசாங்கம் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் பணியாளர்களும் இன்று எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கவுள்ளதாக பேராசிரியர் பன்னெஹேகா குறிப்பிட்டார்.

Tamil News

Leave a Reply