சீன உரத்தை மூன்றாம் தரப்பினர் பரிசோதிக்க இலங்கை இணக்கம்

106 Views

மூன்றாம் தரப்பினர் பரிசோதிக்க இலங்கை இணக்கம்

அண்மையில் சீன நிறுவனமான China’s Qingdao Seawin Biotech Group ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சேதன உரத்தில் பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளமை இரு தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பினர் பரிசோதிக்க இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக சீனத் துாதரகம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய சீன சேதன உரத் தொகையுடன் இலங்கைக்கு வருகை தந்த   HIPPO SPIRIT எனும் கப்பல் தற்போது களுத்துறை- பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கைக்கான சீனத் துாதுவர் Qi Zhenhong நேற்று கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்த பின்னர் சீன உரத்தை 3ம் தரப்பொன்றினால் மீண்டம் பரிசோதனை செய்வதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக   கூறியுள்ளார்.

 மேலும் இந்த விவகாரம் வெறும் வர்த்தக தகராறு எனவும் எனினும் சில தரப்பினர் இதனை அரசியலாக்க முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 இலங்கையில் இயற்கை உரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் திடீரென அரசு இந்த அறிவிப்பை  வெளியிட்டு, இரசாயண உரத்தை தடைசெய்துள்ளமையினால் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயற்கை உரம்தான் சிறந்தது என்று அதை ஏற்றுக்கொள்ளும் விவசாயிகள், இயற்கை உரம் தமக்கு போதியளவு கிடைப்பதற்கான வசதிவாய்ப்புக்களை அரசு செய்து கொடுத்த பின்பே இவ்வாறான அறிவித்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இயற்கை உரம் கிடைக்காமையினால் தமது விவயாசம் பாதிக்கப்பட்டுள்ளதோடு தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad சீன உரத்தை மூன்றாம் தரப்பினர் பரிசோதிக்க இலங்கை இணக்கம்

Leave a Reply