விவாதிக்கவிருக்கும்  22 வது திருத்தம் குறித்து ஐ. நாவின்  விசேட அறிக்கையாளர் கவலை

அரசாங்கம் விரைவில் பாராளுமன்றத்தில்  விவாதிக்கவிருக்கும்  22 வது திருத்தம் குறித்து  நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகளின்  விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட், முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் முறைப்படி தனது கவலைகளை வெளிபடுத்தியிருக்கிறார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சுதந்திரத்தையும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கக்கூடும் என்றும் குறிப்பாக தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளுக்கு இந்த மாற்றத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் இதையும் ஏனைய சர்வதேச அவதானிப்புகளையும் தீவிர  அக்கறையுடன்  கருத்தில்  ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் எதிர்பாராத தலையீடு தனியான முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த மாற்றம் ஏன் அவசியம் என்பதையும் தற்போதைய நீதிபதிகளுக்கு இது ஏன் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அரசாங்கம் தெளிவாக விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.