ரஷ்யாவுடன் நடைபெறும் போருக்கு இடையே உக்ரைனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இன்று (செப்டம்பர் 4ஆம் திகதி) பதவி விலகியுள்ளார்.
ஏற்கெனவே ஐந்து அமைச்சர்கள் நேற்று (செப்டம்பர் 3ஆம் திகதி) பதவி விலகிய நிலையில் மேலும் பல அமைச்சர்கள் விலகுவதும் புதியவர்கள் நியமிக்கப்படுவதும் இனிவரும் நாள்களில் இடம்பெறும் என்று ஜனாதிபதியின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.