உக்ரேன் விவகாரம் – ரஸ்யா விதித்த நிபந்தனை

440 Views

உக்ரேன் விவகாரம்

உக்ரேன் விவகாரம்: ரஸ்யாவின் எல்லைப்புற நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் உக்ரேன் மீதான படை நடைவடிக்கை அச்சுறுத்தல் நீங்கும் என ரஸ்யா கடந்த வெள்ளிக்கிழமை (17) தெரிவித்துள்ளது.

உக்ரேனின் எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் படை குவிப்புக்களை மேற்கொண்டுவருவதால், ரஸ்யா உக்ரேன் மீது படை நடைவடிக்கை ஒன்றை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் மேற்குலக நாடுகளில் தோன்றியுள்ளது.

ஆனால் அதனை மறுத்துள்ள ரஸ்யா, இது தொடர்பில் அமெரிக்கா தன்னுடன் நேரிடையாக பேச வேண்டும் எனவும், தனது எல்லைப்புற நாடுகளை நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் நிபந்தனை வித்துள்ளது.

எனினும், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்களில் அந்த நாடுகளை விடுத்து தம்மால் பேச முடியாது என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றியம், போலந்து மற்றும் பல்கன் குடியரசு நாடுகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்கும் பொருட்டே நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு ஜோர்ஜியா மீதும், 2014 ஆம் ஆண்டு உக்ரேன் மீதும் படை நடவடிக்கையை மேற்கொண்ட ரஸ்யா கிரைமியா பகுதியையும் கைப்பற்றியிருந்தது.

Tamil News

Leave a Reply