இலங்கை:எரிபொருளுடன் இரண்டு கப்பல்கள் வருகை- ஆனாலும் மக்கள் வரிசையில் காத்திருப்பு

எரிபொருளுடன் இரண்டு கப்பல்கள்

எரிபொருளுடன் இரண்டு கப்பல்கள்

இலங்கைகை்கு  வருகை தந்துள்ள இரு  கப்பல்கள் மூலம்  நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையயங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றும் நாடு முழுவதும் எரிபொருளுக்கான நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்திய கடன் ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருளுடனான மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெட்ரோலிய மொத்த களஞ்சிய முனையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W. டி சொய்சா தெரிவித்துள்ளார்.

கப்பல்களில் இருந்து தற்போது எரிபொருள் இறக்கப்படுவதாகவும், இன்று முதல் நாடு முழுவதும் அவற்றை விநியோகிக்க சுமார் 450 பௌசர்கள் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதகாலமாக ஏற்பட்டுவந்த  எரிபொருளுக்காக நீண்ட வரிசை தற்பொழுது குறைந்துள்ளது.

அளவுக்கு அதிகமான  எரிபொருளை வைத்திருப்பவர்களை காவல்துறையினர் கைது செய்யப்படும் சம்பவம் இடம்பெற்ற நிலையில், தற்பொழுது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடியதான நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கொள்கலனுக்கு எரிபொருள் வழங்கப்படாமையாலும்  மிக இலகுவில் எரிபொருள் பெறகூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.