மலையகத்தில் இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்

163 Views

மலையகத்தில் இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளளனர்

விறகு தேடச் சென்ற இரண்டு சிறுமிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் ரூபிகா வயது 15, சிவலிங்கம் ஸ்ரீதேவி வயது 18 ஆகிய இரண்டு சிறுமிகள் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுமிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருப்பதாகவும் அத்தோடு, குறித்த 2 சிறுமிகளும் தோட்டத்தில் தொழிலாளியாக தொழில் செய்து வந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News

Leave a Reply