எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலர் உட்பட 24 பேர் இராஜாங்க அமைச்சர்களாக புதிதாக பதவிப்பிரமாணம்

24 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

எதிர்த்தரப்பு கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள சிலர் உள்ளிட்ட 24 பேர் இராஜாங்க அமைச்சர்களாக இன்று பதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

புதிய இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னதாக, 21 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இதன்படி, ஜீ.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும், ரோஹன திஸாநாயக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சராகவும், அருந்திக்க பெர்னாண்டோ பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும், லொஹான் ரத்வத்த நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், தாரக பாலசூரிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சராகவும், இந்திக அனுருத்த வீடமைப்பு இராஜாங்க அமைச்சராகவும், சனத் நிஸாந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராகவும்,சிறிபால கமலத் மகாவெலி இராஜாங்க அமைச்சராகவும், அனுராத ஜயரத்ன நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராகவும், சிசிர ஜயகொடி சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சராகவும், பிரசன்ன ரணவீர கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும், டீ.வி.சானக்க சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சராகவும், டீ.பி.ஹேரத் கால்நடைவள இராஜாங்க அமைச்சராகவும், காதர் மஸ்தான் கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், அசோக பிரியந்த வர்த்தக இராஜாங்க அமைச்சராகவும், அரவிந்த்குமார் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராகவும், கீதா குமாரசிங்க கலாசார இராஜாங்க அமைச்சராகவும், குணபால ரத்னசேகர கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகவும், கபில நுவன் அதுகோரல சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், கயாஸான் நவனந்த சுகாதார இராஜாங்க அமைச்சராகவும், சுரேன் ராகவன் கல்வி சேவை மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர். இதேவேளை, மேலும் மூவர் இராஜாங்க அமைச்சர்களாக புதிதாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இதன்படி, டயனா கமகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சராகவும்,சீதா அரம்பேபொல கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராகவும், விஜித பேருகொட துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 24 பேர் இராஜாங்க அமைச்சர்களாக இன்று பதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களில், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியிருந்த டயனா கமகே, சுரேன் ராகவன் மற்றும் அரவிந்தகுமார் ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News