ஆப்கான் தாக்குதல் – 12 அமெரிக்க படையினர் உட்பட 60 பேர் பலி

12 அமெரிக்க படையினர் உட்பட 60 பேர் பலி: ஆப்கானிஸ்தானில் இன்று (26) இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

11 ஈரூடக சிறப்பு படையினரும், ஒரு கடற்படை மருத்துவ பிரிவு உறுப்பினரும் தமது தரப்பில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் அமெரிக்கப் படையினர் பலியாகி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த தாக்குதலில் 60 இற்கு மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ளதுடன், 140 இற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இதனிடையே, தாக்குதல்கள் அங்கு தொடர்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் தலிபான்களுடன் இணைந்து ஜ.எஸ் தீவிரவாதிகளின் இந்த தாக்குதல்களை தடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் அமெரிக்க படையினரின் மத்திய கட்டளை பிரிவின் கட்டளை அதிகாரி ஜெனரல் கெனத் மகென்சி தெரிவித்துள்ளார்.

  ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply