மருத்துவமனைக்கு வெளியே கூடிய மக்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப்!  

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள தனது ஆதரவாளர்களை பார்த்து வாகன அணிவகுப்பில் இருந்தபடியே கையசைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்டு டிரம்புக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து ட்ரம்பின் உடல் நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசி அருகே உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு அவரது உடலில் ஆக்சிஜன் அளவு இரண்டு முறை குறைந்துள்ளதாக அந்த மருத்துவ மையத்தின் மருத்துவர் சான் கான்லி தெரிவித்துள்ளார்.

World - BBC News

இந்நிலையில், வெளியே கூடியுள்ளவர்களைப் பார்க்க ‘சர்ப்ரைஸ் விசிட்’ ஒன்றை தர இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்த ட்ரம்ப், சற்று நேரத்தில் முகக்கவசம் அணிந்தபடி தனது வாகன அணிவகுப்பில் வந்து ஆதரவாளர்களை பார்த்து கையசைத்துச் சென்றார்.

அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகவும் திங்களன்று அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், அவரது நுரையீரல் செயல்பாடு எப்படி உள்ளது என்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.