திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று (31) திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், இது தொடர்பில் மேல் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில்,எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் குறித்த கன்னியா பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில் என்ன வகையான நிர்மாணத்தை மேற்கொள்கின்றது என்பது குறித்த எழுத்து மூல அறிக்கையை தமது தரப்பில் சமர்ப்பிக்க அவகாசம் வழங்குமாறும் அரச தரப்பு சட்டத்தரணி சஞ்ஜீவன் மன்றிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி இவ்வழக்கு செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.