திருகோணமலை படகுப் பாதை விபத்து- மாணவர்களுக்கு மகிழ்வூட்டும் நிகழ்வு

383 Views

திருகோணமலை படகுப் பாதை விபத்து

கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் படகுப் பாதை விபத்தில் 23.11.2021 அன்று பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மனநிலையைத் தேற்றுவித்தல் (மகிழ்ச்சியை ஏற்படுத்தல்) உளவளத்துனை சம்பந்தமான நிகழ்ச்சி கிண்ணியா பிரதேச செயக சிறுவர் பிரிவு மற்றும் கலாசாரப் பிரிவு இணைந்து  கிண்ணியா அல்அஸ்ஹர் வித்தியாலத்தில் நடைபெற்றது.

இந்த விபத்தில் குறித்த பாடசாலையில் கல்வி கற்ற நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களும் இப்பாடசாலையினை சேர்ந்தவர்களே. திருகோணமலை படகுப் பாதை விபத்து நடந்த பின் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்த நிலையில்,   மாணவர்களை மகிழ்வூட்டும் செயற்பாடாக  இந்த உளவளத் துணை செயற்பாடுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply