திருகோணமலை : இனந் தெரியாதவர்களினால் படகுகளுக்கு தீ வைப்பு

413 Views

IMG 20210816 WA0005 திருகோணமலை : இனந் தெரியாதவர்களினால் படகுகளுக்கு தீ வைப்பு

திருகோணமலை கும்புறுப்பிட்டி நாவற்சோலை கடற்கரையில் மீன் பிடிப்படகு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது.

இதன் போது நான்கு படகுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்தினை அடுத்து பொது மக்கள்  காவல்து றையினருக்கு தெரிவித்துள்ளனர்.

IMG 20210816 WA0007 திருகோணமலை : இனந் தெரியாதவர்களினால் படகுகளுக்கு தீ வைப்பு

மீனவர்களுக்கு இடையிலான பகையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா்  சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை குச்சவெளி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply