கேரளாவில் போதைப் பொருள் மற்றும் ஆயுதம் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கேரளாவின் விழிஞ்ஞம் கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி படகு ஒன்றல் கடத்தி வரப்பட்ட 300 போதைப்பொருள், 5 A.K -47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்களை கடலோர பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த 6 சிங்கள நபர்களைக் காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.
தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், போதைப் பொருள் மற்றும் ஆயுதம் கடத்தலில் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுரேஷ் மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சுரேஷ் என்பவர் இலங்கைத் தமிழர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.