வவுனியாவில் தீபம் ஏற்றி அஞ்சலி: சில ஆலயங்களில் மணியோசையும் எழுப்பப்பட்டது

311 Views

தீபம் ஏற்றி அஞ்சலி
மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன் இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன் 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

03 2 வவுனியாவில் தீபம் ஏற்றி அஞ்சலி: சில ஆலயங்களில் மணியோசையும் எழுப்பப்பட்டதுஅதேவேளை, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட செ.அரவிந்தன் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 வவுனியாவில் தீபம் ஏற்றி அஞ்சலி: சில ஆலயங்களில் மணியோசையும் எழுப்பப்பட்டது

Leave a Reply