திருகோணமலை: வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதன உரம் தயாரிக்கும் பயிற்சி  

126 Views

விவசாயிகளுக்கு சேதன உரம் தயாரிக்கும் பயிற்சி

வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதன உரம் தயாரிக்கும் பயிற்சி: “சௌபாக்கியா” தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில்  இயற்கை உணவுப் உற்பத்தி அதிகரிப்பதற்கான செயற்பாடுகளின் கீழ் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனம் மற்றும்  தமிழ் போரம் மலேசியா ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதன உரம் தயாரிக்கும் செய்முறை அடங்கிய பயிற்சிகள் நேற்று வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனியின் வழிகாட்டலின் கீழ் மாவடிச்சேணையில் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலமையில் இடம்பெற்றது. 

IMG 20211018 WA0029 திருகோணமலை: வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதன உரம் தயாரிக்கும் பயிற்சி  

வெருகல் பிரதேசத்தில் உள்ள 30 விவசாயிகளுக்கு வினைத்திறன் மற்றும் விளைதிறன் மிக்க சேதன உரம் தயாரிக்கும் தொழிநுட்பரீதியான பயற்சிகளை நிலாவெளி மற்றும் வெருகல் பிரதேச கமநல சேவைகள் நிலைய போதனாசிரியர்களான வாஜித் மற்றும் லுஜிதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வைத்தனர்.

IMG 20211018 WA0027 திருகோணமலை: வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதன உரம் தயாரிக்கும் பயிற்சி  

இயற்கையாக கிடைக்கூடியதும் உக்ககூடியதுமான வாழைத்தண்டு, வைக்கோள், வீட்டுக் கழிவுகள் கொண்டு விரைவாகவும், இலகுவாகவும் கூட்டெரு உற்பத்தி செய்யும் குவியல் முறையிலான சேதன உரம் தயாரிக்கும் பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டதுடன் சேதன உரத்தின் பயன்பாடு அதன் முக்கியத்தவம் தொடர்பிலும் தெளிவு படுத்தப்பட்டது.   தொழிநுட்ப ரீதியாக தயாரிக்கப்பட்ட சேதன பசளைகள் அடங்கிய பொதிகள் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad திருகோணமலை: வெருகல் பிரதேச விவசாயிகளுக்கு சேதன உரம் தயாரிக்கும் பயிற்சி  

Leave a Reply