தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் – ருபேசன்

130 Views

தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்

அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் இன்று 100 நாட்களை கடந்தும் அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை எனவே தீர்வு வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என வடக்கு கிழக்கு மாகாண இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் செயலாளர் ஜீ.ருபேசன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கூளாவடியிலுள்ள அவரது வீட்டில் இன்று (19) இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

”அரசாங்கம் சரியான தீர்வினை பெற்றுத்தரும் வரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து செல்லும் அதேவேளை இந்த போராட்டத்தை காட்டிக் கொடுக்கின்றவர்களுக்கு தெட்டதெளிவாக செல்லுகின்றோம் உங்களைப்போன்று எமது போராட்டம் இடை நடுவில் கை விடமாட்டோம்.

அவ்வாறே தொடர்ந்து அழுத்தங்களை கொடுக்கின்ற அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கின்றோம் அழுத்தங்களை கொடுக்காது இந்த ஆசிரியர்களுக்கு சரியான தீர்வை பெற்றுக் கொடுங்கள். நாட்டினுடைய நிலமையினை கருத்தில் கொண்டு சுற்று அறிக்கையை கேட்டிருக்கின்றோம்.

முதலில் எங்களுடைய பிரச்சனையை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் பாடசாலையை திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். எனவே அரசாங்கம் இந்த போராட்டத்தினை மேலும் மேலும் இழுத்தடிக்காது இதற்கான தீர்வுகளை வழங்கி பாடசாலை ஆரம்பித்து மாணவர்கள் இழந்த கல்வியை கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவே எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் – ருபேசன்

Leave a Reply