குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35ஆம் நினைவு நாள் இன்று…

227 Views

இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல்புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 35 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு

யாழ்.மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) திருமலைமாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.) மேஜர்அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) கப்டன்பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன்கரன் (வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.) கப்டன்மிரேஸ் (தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன்நளன் (கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட்அன்பழகன் (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட்தவக்குமார் (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம்லெப்டினன்ட் ரெஜினோல்ட் (கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம்லெப்டினன்ட் ஆனந்தகுமார் (ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.)

இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை  அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று கப்டன் ரகுவப்பா (இராஜமாணிக்கம் ரகுமான்–வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

Leave a Reply