அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் அவசியம் – இலங்கை குறித்த புதிய தீர்மானத்தில் வலியுறுத்தல்

அனைத்து தரப்பினராலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறை அவசியம் என ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை, கைதுகள் மற்றும் அரசாங்க ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறை, இதன் விளைவாக ஏற்பட்ட மரணங்கள், அழிவு மற்றும் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

அத்தோடு இராணுவமயமாக்கல் நடவடிக்கை, முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு தொடர்பாகவும் இதில் சுட்டிக்காட்டியுள்ளது.