கூட்டமைப்பு விரைவில் புதுடில்லிக்குப் பயணம்

கூட்டமைப்பு விரைவில் புதுடில்லிக்குப் பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்காக விரைவில் புதுடில்லிக்கு அழைக்கவுள்ளது இந்திய மத்திய அரசு. இதனால் கூட்டமைப்பு விரைவில் புதுடில்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சாத்தியமான நிலை உள்ளதாக அறியப்படுகின்றது.

இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் நேரில் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“தங்களை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம். அந்தச் சந்திப்புக்கான திகதி இந்தியத் தூதரகம் ஊடாக அறிவிக்கப்படும்” என்று இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply