Tie கட்ட மறுப்பு -நியூசிலாந்தின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மவுரி கட்சியின் தலைவர்

நியூசிலாந்தின் மவுரி கட்சியின் இணைத் தலைவர் Rawiri Waititi அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கழுத்தில் கட்டும் டை (Tie- கழுத்து பட்டி) கட்டவில்லை என்பதால் நாடாளுமன்ற விதியை மீறியதாக நாடாளுமன்றத்திலிருந்து  வெளியேற்றப்பட்டார்.

ஆண் அரசியல்வாதிகள் கேள்விகளைக் கேட்கும்போது டை அணிய வேண்டும் என்பது நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் ஆடை அணைதல் குறித்த விதி முறையாகும்.

Rawiri Waititi நாடாளுமன்றத்தில் இரண்டு கேள்விகளைக் கேட்க முயன்றார், ஆனால் சபையின் சபாநாயகர் Trevor Mallard அவர்கள் பலமுறை அவரைத் தடுத்தார். அவர் தொடர்ந்தும் பேச முற்பட்டபோது  Waititi அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

டைக்ப் பதிலாக மவுரி மக்களின் பண்பாட்டு அடையாளச் சின்னங்களில் ஒன்றான கல் பதக்கத்தை அணிந்திருப்பதாக Rawiri Waititi வாதிட்டார். ஆனால் அந்த வாதத்தை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார்.

டை அணிவது காலனித்துவ அடையாளம் – தூக்குக் கயிறு என்று Rawiri Waititi வாதிட்டார். “இது பழங்குடி மக்களின் உரிமைகளை மீறுவதாகும், இதுபோன்ற ஒரு இடத்தில் நமது கலாச்சார அடையாளத்தை கடைப்பிடிக்க எங்களுக்கு சுதந்திரம் உள்ளது” என்று Rawiri Waititi என்றார்.

சபாநாயகர் Trevor Mallard யின் முடிவை ஏற்க இயலாது என்றும்  தொடர்ந்து ஆட்சியை எதிர்த்துப் போராடுவதாகவும் Rawiri Waititi  கூறினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் அணியும் உடை குறித்து அனைத்து உறுப்பினர்களின் கருத்தை தான் கேட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தான் இறுதி மூவு எடுத்ததாகவும், பதிலளித்த உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையானவர்கள் டை அணிதல் அவசியம் என்று கருத்து வெளியஈடதாகவும் சபாநாயகர் Trevor Mallard கூறினார். ஆனால்

நியூசிலாந்தின் மவுரி கட்சியின் இணைத் தலைவர் Rawiri Waititi மற்றும் அவரின் கட்சியினர் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை. அனால் நியூசிலாந்தின் மவுரி கட்சியின் மற்றொரு இணைத் தலைவர் Debbie Ngarewa-Parker ஒரு பெண் என்றபோதிலும் அவர் டை அணிந்து வந்திருந்தார்.

நன்றி – SBS தமிழ்