172 Views
அமெரிக்காவில் ஆசிய இனமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே உங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் என அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருகின்றன. அங்கு ஆசிய இன மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் பணிபுரிபவர்கள், அனைத்துலக மாணவர்கள் போன்றோருக்கான அச்சம் அதிகரித்துள்ளது என கடந்த செவ்வாய்க்கிழமை (01) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.