சீனாவின் தென் பகுதியிலும் வியட்நாமிலும் சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
தலிம் என்றழைக்கப்படும் அந்த சூறாவளியினால் நூற்றுக்கணக்கான இரயில், விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.
இந்த ஆண்டு சீனாவை உலுக்கியுள்ள 4ஆவது கடும் புயல் இது என அந்நாட்டு வானிலை ஆய்வகம் கூறியுள்ளது.
குவாங்டோங் மாநிலத்தில் புயல், மழை காரணமாக செம்மஞ்சள் நிற எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 230,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 8,000 மீன் பண்ணை ஊழியர்களும் அடங்குவர். கரையோரப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
வியட்நாமில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 30,000 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாய் அதிகாரிகள் கூறினர்.