ஜப்பான் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 4ஆவது நேர அட்டவணையின் கீழ் இரண்டாவது குழுவுக்காக 284 மில்லியன் ஜப்பான் ஜென்கள் (சுமார் 611 மில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பான் அரசுடன் பரிமாற்றுக் கடிதத்தில் கையொப்பமிடுவதற்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.