சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றவர்கள் கைது

169 Views

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு பயணிக்க முயன்ற 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் உள்ளனர்.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, இவ்வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 600 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply