கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே இந்தியாவிற்கு உகந்த தருணம்-பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர்

121 Views

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் நேற்று  கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பில் கரிசனையுடன் செயற்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Leave a Reply