காகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்து இரண்டாயரம் நாட்கள் கடந்துவிட்டது. அவர்கள் கடந்துவந்த பாதையில் எதிர்கொண்ட துன்பங்கள், போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பன போன்ற கேள்விகளுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சனி உயிரோடைத் தமிழ் தாயகக் களம் நிகழ்வுக்காக வழங்கிய நேர்காணலின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகர்களுக்காகத் தருகின்றோம்.