கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை-அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்

69 Views

இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் உள்ளதாகவு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply