வங்கிகளின் தலைமை அதிகாரிகள் மீது நடவடிக்கை – பைடன்

சிலீக்கன் வலி வங்கி (எஸ்.வி.பி) எனப்படும் அமெரிக்காவின் மிகப்பெரும் வங்கியின் அண்மைய வீழ்ச்சி அமெரிக்காவை கடுமையான பாதித்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் வங்கிகள் வீழ்ச்சி கண்டால் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வெள்ளிக்கிழமை (17) தெரிவித்துள்ளார்.

வங்கி அதிகாரிகளின் தவறான முகாமைத்தவம் மற்றும் அதிகளவில் ஆபத்தான நடைவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காரணிகளால் தான் வங்கிகள் வீழ்ச்சி கண்டுவருகின்றன. அவ்வாறான அதிகாரிகள் மீது தண்டனை பணம் அறவிடப்படுவதுடன், அவர்கள் வேறு எந்த நிறுவனங்களிலும் பணியாற்ற முடியாதவாறு தடைகளும் விதிக்கப்படும் என பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு அமெடரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரும் வங்கி வீழ்ச்சியை தொடர்ந்து அமெரிக்காவில் இடம்பெற்ற இரண்டாவது மிகப்பெரும் வங்கியின் வீழ்ச்சி இதுவாகும். இந்த வீழ்ச்சி அமெரிக்காவில் கடும் அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட வீழ்ச்சியின் பின்னர் வங்கிகள் மீது அமெரிக்கா புதி சட்டங்களை கொண்டுவந்தபோதும், பின்னர் 2018 ஆம் ஆண்டு அவை தளர்த்தப்பட்டிருந்தன. கடந்த வாரம் வீழ்ச்சி கண்ட எஸ்.வி.பி வங்கி அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் 16 ஆவது பெரிய வங்கியாகும்.