இலங்கையின் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை – பபியன்

135 Views

இலங்கையின் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை

சிறீலங்காவில் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் கடந்த 18 மாதங்களில் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளதாகவும், இலங்கையின் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாது தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பபியன் சல்வியோலி(Fabián Salvioli)நேற்று கடந்த வியாழக்கிழமை (16) ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உண்மைகளை கண்டறிவதில் அங்கு எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. நீதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் பின்னடைவையே சந்தித்துள்ளன. சிறீலங்காவில் தற்போதைய அரசின் தலையீட்டினால் பல நீதி விசாரணைகள் தடைப்பட்டுள்ளன.

அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான விசாரணையிலும் படைத்துறை புலனாய்வு அதிகாரிக்கு ஆதரவாக சிறீலங்கா அரச தலைவர் செயற்பட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணகொடவுக்கு எதிரான நீதி விசாரணையும் நிறுத்தப்பட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகமும் இயக்கமற்று உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply