ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்: மக்கள் பிரதிநிதிகள் என்ன கருதுகின்றார்கள் | சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்

கொள்கையில் மாற்றமில்லை

ஐநா விடயத்தில் இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை

முதலாம் திகதி ஜெனிவா மனித உரிமை சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஒரு உரை ஒன்றை ஆற்றியிருக்கிறார்.

மக்கள் பிரதிநிதிகள் கருத்துஅந்த உரையினை ஒட்டுமொத்தமாக பார்ப் போமானால், அதில் புதிதாக ஒன்றுமே கூறவில்லை. இதுவரை நீண்ட நெடுங் காலமாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகள், பேச்சு சுதந்திரம் இவற்றினை இலங்கை அரசாங்கம் கையாளும் விதத்தில் எந்த விதமான ஒரு முன்னேற்றமும் காட்டப்படாமல் அதே கொள்கையை கையாளுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

அவர் ஆரம்பதிலே கூறுகிறார் என்னுடைய ஜனநாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதனுடைய சுயாதீனமான ஸ்தாபனங்கள், நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை என்பவற்றை கேட்கும் போது எங்களுக்கு சிரிப்புத்தான் வருகிறது.

ஏனென்றால் இதில் எந்தவிதமான முன்னேற்றகரமான விடயங்களும் இல்லை. என்றால் எப்போது தமிழ் மக்கள் தங்களுக்கு போர் குற்ற விசாரணையை வெளிநாட்டு குழுக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளுடன் விசாரிக்க வேண்டும். உள்ளக விசாரணை எங்களுக்கு தேவையில்லை என கூறி வரும் கருத்துக்களுக்கு எதிர்மாறாக இலங்கை அரசினுடைய நீண்ட நெடுங்காலமாக கைப்பற்றி கொண்டு வந்த கொள்கையை மீண்டும் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தி இருக்கிறார்.

எந்த விதமான ஒரு முன்னேற்றகரமான விடயமும் உள்நாட்டில் எடுக்கப்படவில்லை. எனவே இத்தகைய சூழ்நிலையில் உள்ளக விசாரணையை தான் அதில் கோடிட்டு காட்டியிருக்கிறார்.

உள்ளக விசாரணையில் எங்களுக்கு எதுவித நம்பிக்கையும் இல்லை என்ற விடயத்தை தமிழ் மக்கள் மிக ஆணித்தரமாக எத்தனையோ சந்தர்ப்பங்களில் கூறி வந்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல தங்களுடைய அரசாங்கத்தில் அதாவது ஒப்பந்த நிறுவனங்கள் , ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் எடுக்கப்பட்ட விஷேட நடைமுறைகள் பற்றிய விடயங்கள் கூறியிருக்கிறார்.

ஐநாவினால் முன்னெடுக்கப்பட்ட விஷேட அறிக்கை வந்ததெல்லாம் நல்லாட்சி அரசாங்கத்தில் அதாவது இவர்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தில்தான் முன்னெடுக்கப்பட்டதே தவிர இவர்கள் புதிதாக எந்த விதமான ஐநாவின் விஷேட நிபுணர்களை உள்நாட்டுக்கு அழைத்ததாக எங்களுக்கு எதுவிதமான தகவலும் இல்லை.

எனவே முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் இத்தகைய விடயங்களை கூறி இருக்கிறார். இது உண்மைக்கு புறம்பானது. நல்லொரு இனங்களுக்கான நல்லுறவை மேம்படுத்துவதற்கான பல விடயங்கள் உள்ளூர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் எடுக்கப்படுகின்றன.

ஆனால் எதுவிதமான நல்லுறவுக்கான விடயங்கள் இங்கு எடுபட்டதற்கான எந்தவித சான்றுகளும் இல்லை. அதற்கு மாறாக இனங்களுக்கு இடையே வித்தியாசங்களை, வேறுபாடுகளை அரசாங்கமே வளர்த்து இனங்களுக்கான வேறுபாடுகளை இவர்கள் செய்தார்கள் என்று சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து மிக நீண்ட நெடுங்காலமாக அவர்களை சிறையில் அடைத்து வைக்கும் நடவடிக்கை நடக்கிறதே ஒழிய இனங்களுக்கான ஒற்றுமையை வளர்ப்பதில் எந்த விதமான செயற்பாடும் இங்கே இல்லை.

அத்துடன் மிக முக்கியமாக சுட்டிக்காட்டியிருப்பது என்னவென்றால் மனித உரிமை சபை இலங்கையின் சம்மதத்திற்கு மாறாக தகவல்களை அதாவது போர் குற்ற தகவல்களை சேகரிக்கும் விடயத்தினை ஆரம்பித்து இருப்பது ஒரு பிழையான, தவறான விடயம். எந்த விதமான அரசாங்கத்தின் சம்மதமும் இல்லாது நடக்கின்றது.

வெளிப்பாடு இன்மை மற்றையது பாரபட்சமாக நடத்தப்பட்டது என்றெல்லாம் கூறுகிறார். ஆனால் இந்த விடயங்கள் போன முறையே மனித உரிமைகள் அமர்வின் அறிக்கை வாயிலாக தகவல் சேகரிக்கும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கிவிட்டது. அது சம்பந்தமான ஒரு அலுவலகமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இனி அந்த நடவடிக்கைகள் தொடரப்படத்தான் வேண்டும். அதற்கான நிதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னார்வ பங்களிப்பு என்று அவர் சொல்லுவார். அது எல்லாம் தொடங்கப்பட்டிருக்கிறது. அது மிக விரைவில் அதன் செயற்பாடுகள், ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இங்கு நடந்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, இன சுத்திகரிப்பு, இலங்கை இராணுவம் அவர்கள் போரின்போது செய்த அட்டூழியங்கள், மனிதப் படுகொலைகள், இவை அனைத்துமே விசாரிக்கப்பட வேண்டியவைதான்.

அதற்கு எதிராக வெளிநாட்டு அமைச்சர் குரல் கொடுத்திருக்கிறார். அவர் அப்படி செய்யக்கூடாது என்று. ஆனால் அது காலம் கடந்த ஒரு விடயம். ஏனென்றால் அதற்கான அத்திவாரம் ஏற்கனவே போடப்பட்டிருக்கிறது. அத்துடன் புதிதாக பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தி புதிதாக ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். அதில் எந்தவிதமான முன்னேற்றகரமான விடயங்கள் இல்லை. பழைய விடயங்களையே கூறுவதாக காணப்பட்டிருக்கிறது.

ஆனால் அதை விட மோசமான விடயங்களில் திணிக்கப்பட்டிருக்கின்றது. முக்கியமாக கருத்தை வெளியிடும் சுதந்திரம், மக்கள் ஒன்று கூடும் சுதந்திரம், இவை எல்லாமே புதிதாக உள்ள சட்டத்தின் மூலம் மக்களை, மக்களுடைய உரிமைகளை நசுக்குவதான விடயங்கள் அந்த சட்டத்தில் காணப்படுகின்றது.

அதனால் தான் இச் சட்டத்தை வடக்கு, கிழக்கு, தெற்கில் இருக்கின்ற எல்லா இன மக்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இத்தகைய விடயங்களை வெளிவிவகார அமைச்சர் அங்கு கூறியிருக்கிறார். எதுவிதத்திலும் அங்கு எடுபடாது என்றுதான் கூற வேண்டும். இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது? மனித உரிமைகளுக்கு செயற்படும் ஒரு அரசாங்கமாக விளங்குகிறது.

பெரும்பான்மை இனத்தையே முன்னிலைப்படுத்தி மற்ற இனங்களை சிதைக்கும் விடயத்தையே பல தசாப்தங்களாக அரசாங்கங்கள் அது எந்த அரசாங்கமாக இருக்கலாம். அதாவது எந்த கட்சி அரசாங்கமாகவும் இருக்கலாம் இவையெல்லாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன.

எனவே இதையெல்லாம் மூடி மறைப்பது போல் வெளிவிவகார அமைச்சரின் உரை அமைந்திருந்தாலும், சர்வதேசத்திற்கு உண்மையான நிலை நன்கு விளங்கும் அதன் வெளிப்பாடாகவே இந்த வருடத்தின் அறிக்கை இருக்கும் என்ற விடயத்தை நான் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என மேலும் தெரிவித்தார்.

Tamil News