வேலை முடிந்தது வேலிக்கு அப்பால்; கழற்றிவிடப்பட்ட மணிவண்ணன்?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து அக்கட்சியின் முக்கியஸ்தரான வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கத்திலிருந்து முக்கிய பங்கினை ஆற்றி வந்த மணிவண்ணன் நடந்து முடிந்த தேர்தலில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்றுமிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலில் பெற்ற வெற்றியில் வி.மணிவண்ணனின் மிகப்பெரும் பங்கு முக்கியமானது.நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மணிவண்ணனுடன் இணைந்து முன்னணியின் வெற்றிக்காக பாடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டதாக தெரிவித்தே பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கட்சியின் வெற்றிக்கொண்டாட்டங்களில் மணிவண்ணன் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக ஆதரவாளர்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமை இது தொடர்பில் எந்தவித அறிவிப்பினையும் ஊடகங்களிற்கு விடுத்திருக்கவில்லை.