வெனிசுலாவின் உறுதியை குலைத்து அதனை தன்வசப்படுத்தும் முகமாக அமெ ரிக்கா பெருமளவான நிதிகளை செலவிட்டு முன்னாள் அதிபர் உட்பட பலரை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாக வெனி சுலாவின் அதிபர் நிகோலஸ் மடுரோ கடந்த புதன்கிழமை(8) தெரிவித் துள்ளார்.
வெனிசுலாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதே அமெரிக் காவின் பிரதான நோக்கம். 2024 ஆம் ஆண்டு வெனிசுலாவில் இடம் பெற்ற தேர்தல் முடிவுகளையும் அமெரிக்கா ஏற்க மறுத்து வருகின் றது.
எனது நாட்டில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் போலியான தேசியவாதிகளை நிதிகளை வழங்கி அமெரிக்கா ஊக்கப்படுத்தி வருகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளை கைப்பற்றும் நோக் கத்துடன் லத்தீன் அமெரிக்க பிர தேசத்தில் உள்ள ஊழல்மிக்க அரசியல்வதாதிகள் மற்றும் படை அதிகாரிகளை அமெரிக்கா தனக்கு சார்பான பணிகளில் அமர்த்தி வரு கின்றது. அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சகம் அதற்காக தொகை எழுதப்படாத காசோ லைகளை வழங்கி வருகின்றது. லீமா குழு என்ற போர்வையில் அமெரிக்காவுக்கு ஆதர வாக பணியாற்றியவர்களை நாம் முன்னர் முறியடித்திருந்தோம், எமது லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து அகற்றியிருந்தோம். ஆனால் தற்போது அவர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைபொருள் வினியோக ஸ்த்தர்கள், ஊழல்வாதிகளை ஊக்ககப்படுத்தி மீண்டும் வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் பயங்கரவாதத் தாக்கு தலை மேற்கொள்வதற்கு முயன்ற 7 பேரை தாம் கைது செய்திருப்பதாகவும், அவர்களில் 3 பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நான்குபேரும் அமெரிக்கா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் வெனிசுலா கடந்த செவ்வாய்க்கிழமை(7) தெரிவித்திருந்தது.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஆயு தப் புரட்சிகளை மேற்கொள்ள முனைந்த 25 நாடுகளைச் சேர்ந்த 125 பேரை தாம் கைது செய்திருப்பதாக வெனிசுலா அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.