பிரதமரை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

88 Views

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து புதிய பிரதமருடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் உழைக்கும் போது, நாட்டின் தலைவர் ஒருவர் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை அணுகுவது கட்டாயமாகும் எனவும் அவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply