சீன உதவிகள் தொடர்ந்தும் இலங்கைக்கு கிடைக்கும் – கொழும்பு சீன தூதரகம் தெரிவிப்பு

54 Views

சீனாவிடம் இருந்து மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் மேலும் 500மெட்ரிக் தொன் அரிசியை கொண்ட இரு கப்பல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அனுப்பப்பட்ட இரண்டு 500மெட்ரிக் தொன் அரிசி தொகுதிகள் ஜூலை 16மற்றும் 19ஆம் திகதிகளில் கொழும்பை வந்தடைந்துள்ளன. ‘இதுவரை, பாடசாலை உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் உள்ள 7,900பாடசாலைகளில் 1.1மில்லியன் குழந்தைகளுக்கு 3,000மெட்ரிக் டன் அரிசி கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply