01. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (11) கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் பேரவை இயக்கத்தின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், வற் வரியை நீக்குதல், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (11) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி கிட்டுப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்’ என்றும், ‘பாலியல் குற்றங்களை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும்’ என்றும், ‘அவ்வாறான விசாரணைகளுக்காக நடமாடும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் பேரணியை முன்னெடுத்திருந்த பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்.



