முஸ்லீங்களின் புனித ரமடான் பண்டிகை ஆரம்பம்

முஸ்லீம்களின் ரம்டான் பண்டிகை கடந்த வியாழக்கிழமை (23) ஆரம்பமாகியுள்ளது. இந்த பண்டிகையினை தொடர்ந்து எதிர்வரும் 30 நாட்களுக்கு முஸ்லீம் மக்கள் சூரிய உதயத்தில் இருந்து அஸ்த்தமனம் வரையிலும் நீர் ஆகாரம் அருந்தாது விரதம் இருந்து இறைவனை வழிபடுவது வழக்கமாகும்.

உலகின் சனத்தொகையில் 1.9 பில்லியன் மக்கள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள். உலக மக்கள் தொகையில் இஸ்லாம் மதம் இரண்டாவது பெரிய மதமாகும்.

இந்த மாதத்தில் முஸ்லீம் மக்கள் தொடர்ந்து வழிபாடுகளில் ஈடுபடுவதுடன், குரான் என்ற அவர்களின் புனித நூலை படிப்பதுடன், தருமங்களையும் வழங்குவதுண்டு. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக இருப்பதுடன், ஒன்றாகவே உணவு அருந்துவதுண்டு.

1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகமது நபிகளிடம் இறைவன் குரானை வழங்கியதாகவும், அப்போதே ரம்டான் ஆரம்பமாகியதாகவும் முஸ்லீம் மக்கள் நம்புகின்றனர்.

விரதம் இருப்பது முஸ்லீம்களின் ஐந்து தூண்களில் ஒன்று. சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளர்களை தவிர எல்லோரும் இந்த மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். விரதத்தின் முடிவில் அவர்கள் ஈத் பண்டிகையை கொண்டாடுவதுண்டு.

Leave a Reply