மேலும் ஒரு தமிழருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகி வரும் சிங்கப்பூர் அரசு

80dfb520 e365 11ed 9621 a5ad7248ddde மேலும் ஒரு தமிழருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகி வரும் சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

சிங்கப்பூரில் உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம் என்று வாதிடுகிறது அந்நாட்டு அரசு.

இந்நிலையில், 46 வயதான தங்கராஜு, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை  பரிமாற்றம் செய்யும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் குறித்து வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே அவருக்கு நாளை மரணதண்டனையை அரசு நிறைவேற்றயுள்ளதாத் தெரிவிக்கப்படுகின்றது.

பலவீனமான சாட்சியங்கள் அடிப்படையில் தங்கராஜு சுப்பையா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அரசு அதிகாரிகளோ தண்டனை விதித்தலுக்கு முந்தைய அனைத்து நடைமுறை மற்றும் வாய்ப்புகளை தங்கராஜு பெற்றதாகவும், புதன்கிழமை அவரது மரண தண்டனையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் அறிவுசார் குறைபாடுள்ள ஒருவருக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த தண்டனை நிறைவேற்றப்பட்ட ஓராண்டுக்குள் மற்றொரு மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு சிங்கப்பூர் அரசு தயாராகி வருகிறது.