கோட்டாபயவை ஜனாதிபதியாக்கவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது-சந்திரிகா

261 Views

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

குற்றச்சாட்டுகளை நம்புவதாகவும், இந்த விடயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்திற்காக கடத்த ராஜபக்ஷ குலத்தினர் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply