இலங்கையில் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ்

321 Views

இன்புளுவன்சா  போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய்   நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறுகையில்,

கோவிட் நோயுடன் ஒப்பிடுகையில் இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாகவும் சளி, இருமல், காய்ச்சல்  போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது எனவே இதற்கு முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

கோவிட் போலவே இது  இருமல் மற்றும் சளியுடன் தொடங்குகிறது. மற்றும் சில நேரங்களில் மிகவும் அரிதாக நிமோனியா வரை அதிகரிக்கும். கோவிட் உடன் ஒப்பிடும்போது சிக்கல்கள் குறைவாகும்.

இருப்பினும் கோவிட் நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொண்ட அதே நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றினால் இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். முகக்கவசம் அணிதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற முறைகள் மூலம் இந்த நோயைக் குறைக்கலாம் என்றார்.

Leave a Reply