பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி- 5 தமிழ்க் கட்சிகள் ஐ.நாவுக்கு கடிதம்

339 Views

பொது மக்கள் வாக்கெடுப்பு

பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி- 5 தமிழ்க் கட்சிகள் ஐ.நாவுக்கு கடிதம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியனவும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகியனவற்றின் தலைவர்கள் கையெழுத்திட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமமாகும்” என தமிழ் கட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் “இனப்பிரச்சனைக்கு  நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனவும்  குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply