இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புக்களை மக்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் – எம்.கே சிவாஜிலிங்கம்

170 Views

21 60ccea505982b இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புக்களை மக்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் - எம்.கே சிவாஜிலிங்கம்

வட்டுவாகலில் காணி அபகரிக்கும் இராணுவத்தின் முயற்சிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்க முன்வர வேண்டும் என எம்.கே சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம் பெற்றுள்ளது. குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஒருபகுதியாக பல்வேறிடங்கள் சுவீகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக பழைய கச்சேரி கட்டிடம் விற்பனை முயற்சிகள் இடம் பெறுகின்றன. குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை ஆகிய இடங்களை புத்த விகாரை இருந்ததாக கூறி அதனை சூழ பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப் பட்டுள்ளன. இந்த அபகரிப்புகள் வடக்கு கிழக்கை திட்டமிட்டு துண்டிக்கும் நடவடிக்கைகளே. வாகரையிலும் 500 ஏக்கருக்கு மேல் கடற்படை பிடித்து வைத்துள்ளது.

குச்சவெளி பிரதேசத்தில் திரியாய உட்பட அரிசிமலை பிக்கு என்கிற ஒருவர் அப்பகுதியில் 32 விகாரைகளை அமைப்பது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விதிக்கப்பட்டுள்ள பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப் பட்டுள்ளன. தமிழர் ஒரு தேசிய இனம். இந்த நில அபகரிப்பை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

12000 கோடி பெறுமதியில் இலவசமாக தீவகத்தில் சூரிய மின்கலமும் காற்றாலை மூலமும் மின் உற்பத்தியை மேற்கொள்ள இந்தியா முன்வந்திருந்தது. ஆனால் இதுவரை அமைச்சரவை அனுமதி வழங்காது சீனவின் கடன் திட்டத்தில் மேற்கொள்ள முயல்கிறது. பூநகரியில் 16 பேருக்கு தற்போது மீன்பிடி அமைச்சரால் கடலட்டை பண்ணை அமைக்க இடம் கொடுக்கும் முயற்சிகள் இடம் பெறுகிறது. இது சீனாவிற்க்கு கடலட்டை பண்ணையை வழக்கத்தை திசை திருப்பும் ஒரு முயற்சியே. சிங்களவர் ஒருவரை பிரதம செயலாளராக நியமித்ததனூடாக மாகாணங்களுக் குள்ளான இருக்கின்ற அதிகாரங்களை பறிக்கின்ற ஒரு நடவடிக்கையே.

நாளை மறுதினம் கோத்தபாய முல்லைத்தீவு வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணியை நில அளவை மேற்கொண்டு அபகரிப் பதற்க்காக காணி உரிமையாளர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளை சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகளே இடம் பெறுகின்றன.

கொரோனாவை பயன்படுத்தி இராணுவ நில அளவையாளர்கள் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப் பட்டுள்ளன. காணிச் சுவீகரிப்பை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிறுத்த முன்வர வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply