102 Views
கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அனுமதிப்பத்திர முறைமையை உருவாக்கும் யோசனை குறித்து அரசாங்கம் இன்று பாராளுமன்றில் தமது நிலைப்பாட்டை வெளியிட்டது.
இன்றைய சபை அமர்வில், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தை தெரிவித்தார்.
பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வுகாண வெளிவிவகார அமைச்சு தலையிட வேண்டும் எனக் கோரினார். அத்துடன், வட பகுதி விவசாயிகளின் சம்பா நெல்லினை கொள்வனவு செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சார்ல்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.