இனக்குழு அழிப்பின் கோரமுகம்- முனைவர்  குழந்தை சாமி

231 Views

image 1 இனக்குழு அழிப்பின் கோரமுகம்- முனைவர்  குழந்தை சாமி

2022 ஆண்டில் இலங்கையில் பொருளாதார சீரழிவால் 3,00,000 மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை அமைச்சர் திருமிகு மனுஷாநாணயக்காரா உலகப் புலம்பெயர்ந்தோர் நாளன்று தெரிவித்தார். 

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களிடம் ஊழல் மலிந்து கிடக்கிறது. வகுப்புவாதம் தலைதூக்கி ஆட்சி செய்கிறது. வேலையின்மை, பசி, பட்டினி, கொலை, கொள்ளை, விலைவாசி ஏற்றம் போன்றவை நாட்டையே சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

அதைப் பற்றி கவலைப்படாமல் தமிழினக்குழு மக்களை அழிப்பதில் தெளிவாகவும், கூட்டாகவும், சட்டப்பூர்வமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், நரித்தனமாகவும் செயல்படுகின்றனர். தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுத்து போராடிய விடுதலைப்புலி இயக்கத்தை அழித்தனர்.

பிறகு மலையக தமிழ் மக்களையும் ஈழத்தமிழர்களையும் கொலை செய்தனர். காணிகளையும் வேலைவாய்ப்புகளையும் பறித்தனர். தமிழினக்குழு அழிப்பில் தொடர்ந்து, திட்டமிட்டு காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர்.

நாடே நாசமாக போனாலும் பரவாயில்லை தமிழர்கள் இம்மண்ணில் வாழக் கூடாதென சிந்தனையில் செயல்படுகின்றனர். தற்போது இலங்கையில் போதைப்பொருட்களால் இன்றைய, எதிர்கால தலைமுறையினரை அமைதியாகவும் மெதுவாகவும் கொன்றுக் குவிக்கின்றனர்.

எவர்? எங்கே?

ஆக்கிரமிப்புசெய்த நாடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாடுகளில் தங்களது உரிமைக்காக போராடும் மக்கள் இயக்கங்களையும், மக்களையும் அழிக்கின்றன. இதில் அரசும், காவல்துறையும், இராணுவமும், வகுப்புவாதிகளும், ஆளும்வார்க்கமும், பெரும் பணமுதலைகளும், உள்நாட்டு, தேசிய நிறுவனங்களும் இந்த இனக்குழு அழிப்பில் ஈடுபடுகின்றன. இலங்கையில் சிங்கள பேரினவாத அரசும், பௌத்த துறவிகளும், உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களும் ஈழ மண்ணை ஆக்கிரமிப்புசெய்து, உரிமைக்காக போராடும் தமிழ் மக்களை அழித்தொழிக்கின்றது.

ஆளும் சிங்கள வர்க்கம் ஆளப்படும் தமிழ் வர்க்கத்தை அழித்துவிடும். ஆயுதங்களைப் பயன்படுத்தி போர் நடத்தி, தமிழ் மக்களை அழித்தது. இது உடனடியாக நடத்தப்படும் இன அழிப்பாகும். இது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும். ஆனால் மறைமுகமாக, அமைதியாக, மெதுவாக இனக்குழு அழிப்பு நடைபெறுகின்றது.

எப்படி?

காணிகள் போன்ற வாழ்வாதாரங்களையும், வேலைவாய்ப்பையும் பறித்தல்,  சிந்தனைத்திறனை சிதைத்தல், அச்சத்தில் மக்களை வைத்தல், இராணுவமயமாக்குதல், கொடுங்கோல் ஆட்சிப் புரிதல், குடியுரிமை போன்ற உரிமைகளை மறுத்தல் போன்ற இனக்குழு அழிப்பு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் சிறப்பாக சிந்தனைத்திறனை மஞ்சள் இதழ்கள், பாலியல் தொடர்புடைய காணொளிகள் இணையதளத்தில் வெளியிடுதல், பரத்தமைத்தொழில் (விபச்சாரம்), மதுபானங்கள், போதைப் பொருட்கள் போன்றவற்றின் வழியாக சிதைக்கின்றனர் அல்லது அழிக்கின்றனர் அல்லது மழுங்கடிக்கின்றர். இந்த இன அழிப்பில் போதைப் பொருட்கள் அதிக பங்கு வகிக்கின்றன. இந்திய ஒன்றிய நாடுகளைப்போல உலகில் பல நாடுகள் தமிழர்களை அழிப்பதில் இலங்கை பேரினவாத அரசுடன் இணைந்து ஈழத்திலும் மலையகத்திலும் போதைப்பொருட்களை விற்பனை செய்கின்றன.

கடற்படை, காவல்துறை, அரசு போதைப் பொருட்களை தடைசெய்வதுபோல நாடகம் ஆடுகிறது. இரண்டு கல் எடையுள்ள போதைப் பொருளைப் பிடித்தோம் என்று காவல்துறையினர் கூறுவர். ஆனால் 200 கல் எடையுள்ள போதைப்பொருட்கள் மக்களிடையே விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர். எனவே, அரசின் அனுமதியுடன் ஈழத்தில் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. பேரினவாத சிங்கள அரசின் அனுமதியுடன் காவல்துறையினரும், இராணுவமும் இணைந்து தமிழ்ப் பள்ளிகளிலும், வழிபாட்டுத்தலங்களிலும், ஊருக்குள்ளிருக்கும் அனைத்துப் பெட்டிக்கடைகளிலும் வீடுகளிலும் 24 மணி நேரமும் கிடைக்கும் அளவில் ஏற்பாடுசெய்து பல கோடி டாலருக்கு விற்று, அதிகளவில் வருமானம் ஈட்டுகின்றனர். போதைப்பொருள் விற்பனை உலகில் அதிக வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது.

போதைப்பொருட்களை ஏழு வகையாக பிரிக்கலாம்: 

 1. தூண்டிவிடுதல்( Stimulants  – நரம்புகளைவிரைவுபடுத்துதல் அல்லது தூண்டுதல்),
 2. மெதுவாக்குதல்( Depressants      – நரம்புகளை மெதுவாக செயல்பட வைத்தல்),
 3. மகிழ்ச்சியைத்உருவாக்குதல்(Opioids–கட்டுக்கடங்காத மகிழ்ச்சியை அல்லது இன்பத்தை உருவாக்குதல்),
 4. மெய்மையை பார்ப்பதில் மாற்றம்( Hallucinogens – உலகை பார்ப்பதில் மாற்றத்தை உருவாக்கும்),
 5. மெய்மையைபார்ப்பதில் மாற்றம் (Dissociatives – உலகின்மீதுள்ள கண்ணோட்டத்தை மாற்றம்),
 6. இன்பஉணர்வு பெற உள்வாங்குதல் (Inhalants– இன்ப உணர்ச்சியை உருவாக்க புகை அல்லது வாயு போன்று உருவாக்கப்பட்டவைகளை நுகர்தல்),
 7. மெய்மறத்தல் ( Cannabis    – இவ்வுலகை மறந்து கற்பனையில் மிதத்தல்).

பொதுவாக, கீழ்கண்ட போதைப்பொருட்கள் தமிழ்ப்பகுதிகளில் விற்கப்படுகின்றன. இதைச் செய்யும் பெரிய பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முதல் 15 நிறுவனங்களும் அவை ஈட்டும் வருமானமும் பின்வருபவன: 

 1.  . Novo Nordisk . Novo Nordisk (வருமானம் – 20. 261 மில்லியன் டொலர்),
 2.  Gilead Sciences, Inc. (வருமானம் – 23, 147 மில்லியன் டொலர்),
 3. Eli Lilly and Company  (வருமானம் 23, 213.8 மில்லியன் டொலர்),
 4. Amgen Inc.  (வருமானம் – 24, 987 மில்லியன் டொலர்,
 5. AstraZeneca  (வருமானம் – 25, 871 மில்லியன் டொலர்,
 6. . Takeda Pharmaceutical Company Limited  (வருமானம் – 31, 376.9 மில்லியன் டொலர்),
 7. AbbVie Inc     (வருமானம் – 36, 227 மல்லியன் டொலர்),
 8. Sanofi (வருமானம் – 37, 692 மல்லியன் டொலர்),
 9. Bristol-Myers Squibb Company  (வருமானம் – 39, 395 மில்லியன் டொலர்),
 10. Johnson & Johnson      (வருமானம் – 42, 198 மில்லியன் டொலர்),
 11. Glaxo Smith Kline plc  (வருமானம் – 45, 226.5 மில்லியன் டொலர்),
 12.  Merck & Co     (வருமானம் – 47, 347 மில்லியன் டொலர்),
 13.  . Pfizer  (வருமானம் 48, 649 மில்லியன் டொலர்,
 14. Novartis     (வருமானம் – 49, 584 மில்லியன்),
 15. Roche     (வருமானம் – 66, 946.9 மில்லியன் டொலர்). பலருடைய உயிரைப் பறித்து வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மனசாட்சியே இல்லை. இவர்கள் கொலையாளிகள். இதைச் செய்யும் பெரிய பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முதல் 15 நிறுவனங்களும் அவை ஈட்டும் வருமானமும் பின்வருபவன:

விளைவுகள்

பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களும், அரசுகளும் கொள்ளை வருமானம் ஈட்டுகின்கிறன. ஆனால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட  நாடுகளில் வாழும் மக்கள் மெதுவாகவும் அமைதியாகவும் கொல்லப்படுகின்றனர். அரசுக்கும், நிறுவனங்களும் எதிராக செயல்படும் நல்ல உரிமைப் போராளிகளை தேசத்துரோகிகளாக கருதி போதைப்பொருள் என்னும் உயிர்கொல்லியை, அல்லது கொலை ஆயுதத்தை பயன்படுத்தி கொலைசெய்கின்றனர். நயன்மை உணர்வு, உரிமைக்காக போராடும் குணம், நாட்டுப்பற்று, அமைதி, நல்லிணக்கம், விடுதலை வேட்கை, தூய வாழ்வு, நாட்டுப்பற்று போன்ற பண்புகளை அப்புறப்படுத்துகின்றனர். தூய்மையான பண்பாட்டுக் கூறுகளை அழித்துவிடுகின்றனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி, அழிக்கின்றனர். இந்தப் போதைப்பொருட்களால் விடுதலைப்போராட்டம் தடைசெய்யப்படுகின்றது. உரிமைகள் பறிபோகிவிட்டன. போதைக்கு அடிமையானதால் மூளை பாதிக்கப்பட்டு, பைத்தியங்களாக அலைகின்றனர். தன்நினைவில் வாழ முடியாதவர்களாக மாற்றப்பட்டனர்.

போதைப்பொருட்களால் குழந்தை பிறப்பு பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தையைப் பெற்றெடுக்க போதிய வலிமையின்மை, அல்லது இயலாமை தருகிறது. பிறக்கும் குழந்தை ஊனமுள்ள குழந்தையாக பிறக்கின்றது. இவ்வாறு தமிழினக்குழுவை எதிர்காலத்தில் இல்லாமல் செய்கின்றனர். தமிழினக்குழுவை ஈழத்திலும், மலையகத்திலும் துடைத்தெறிய சிங்கள பேரினவாத அரசும், பேராசைக்கொண்ட உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களும் துடியாக துடிக்கின்றன.

போதைப்பொருட்களால் தமிழர்களின் உயிரை பறிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதஅரசும், காவல்துறையும், இராணுவமும், போதைப்பொருட்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்களும் இனப்படுகொலையின் ஊற்றாக உள்ளன. இவர்கள்தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், இயற்கைக்கு எதிரானவர்கள். உயிர் குடிக்கும் இரத்தக் காட்டேரிகள். இது அமைதியான இனப்படுகொலையாகும். இது இனவெறியர்களின் கோர முகத்தைக் காட்டுகிறது.

Leave a Reply