மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் கடந்த ஆண்டு மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 40 வருடங்களில் தற்போதே அது மிக வேகமாக வளர்ந்துள்ளது.
எனினும் உலகின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் என்பன இந்த வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
நான்காவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.5 விகிதம் என முன்னர் கணிக்கப்பட்டபோதும், அது 7.2 விகித வளர்ச்சியை கண்டுள்ளது. 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வேலை வாய்புக்களின் அதிகரிப்பு, கோவிட்-19 நோய் கட்டுப்பாடுகளின் தளர்வு, சீனா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தியமை போன்றவையே இந்த பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என பொருளாதார திட்டமிடல் செயலாளர் ஆர்செனியோ பலிசகன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த வளர்ச்சி தொடரும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.