உக்ரைனின் தாக்குதல் விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் தன்னிடம் உள்ள மிக்-29 ராக தாக்குதல் விமானங்களை பாகங்களாக பிரித்து போலந்து நாடு உக்ரைனுக்கு வழங்கியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பல விமானங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை போலந்து அரசு மறுத்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு தாக்குதல் விமானங்களை வழங்குவது ரஸ்யாவுடனான நேரடி மோதலுக்கு வழிவகுக்கும் என அமெரிக்கா ஆரம்பத்தில் போலந்தை தடுத்த போதும் விமானங்களை இரகசியமாக வழங்கியுள்ளது போலந்து. கடந்த ஏப்பிரல் மாதம் போலந்து தனது டாங்கிகளில் அரை பங்கையும், பல்குழல் உந்துகணை செலுத்திகளையும், மிக்-29 மற்றும் எஸ்யூ-27 ரக விமானங்களையும் வழங்கியிருந்தது.
ஆனால் தற்போது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் உட்பட நேட்டோ நாடுகள் கனரக டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க தீர்மானித்துள்ளன.
நேட்டோவின் இந்த நடவடிக்கை மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.