டெல்டா வைரஸ் மட்டக்களப்பில் அதிகளவில் இருக்கலாம்- மருத்துவர் மயூரன்

IMG 5641  டெல்டா வைரஸ் மட்டக்களப்பில் அதிகளவில் இருக்கலாம்- மருத்துவர் மயூரன்

“மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வைரஸ் இதுவரையில் உத்தியோக பூர்வமாக கண்டுபிடிக்கப் படவில்லை. இருந்தும் தொற்று முறையினையும், மரண எண்ணிகையினையும் பார்க்கும் போது டெல்டா வைரஸ் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது” என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கொரோனா நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 303 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.  இதுவரையில் 152 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் சிறுசிறு கொத்தணிகள் உருவாகுவதற்கு ஒன்றுகூடல்களே காரணமாகயிருந்தன. மரண வீடுகள், கோவில்களுக்கு சென்று வந்தவர்கள், திருமண வீடுகளுக்கு சென்று வந்தவர்கள். எனவே ஒன்று கூடல்களை முற்றாக தவிருங்கள். ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்ப்பதன் மூலமே மட்டக்களப்பு மாவட்டத்தில்   தொற்றுநோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில் 2,66000 ம் தப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் 61,800 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.   இன்னும் 50ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்குமானால் 30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் பூர்த்தியடையும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டாவேரியன் இதுவரையில் உத்தியோகபூர்வமாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தும் தொற்று முறையினையும் மரண எண்ணிகையினையும் பார்க்கும் போது டெல்டா வைரஸ் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது” என்றார்.

ilakku-weekly-epaper-143-august-15-2021