கொரோனா: இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரிப்பு

423 Views

FB IMG 1629114867056 கொரோனா: இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரிப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று 194 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 4,353 பேருக்கு நேற்று (23) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் இதுவரை 3,94,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021

Leave a Reply